Harmon Pills Raising Rape for 5 Years

20 ஆண்டுகளாக தனி அறையில் தங்கையை நிர்வாணமாக வைத்து சித்ரவதை செய்த அண்ணன்!

கோவா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சான்கியூலிம் கிராமத்தில் ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினர் தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் சோதனை செய்த போலீசார், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டனர்.

குறிப்பிட்ட அந்த பெண் கல்லூரி படித்து கொண்டிருந்தபோது ஒரு சில காரணங்களுக்காக தனது தாய் மற்றும் சகோதரனால் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை சுமார் 20 ஆண்டுகளாக தனி அறையில் அடைத்து வைத்து அவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். போர்வையின்றி, படுக்கை இன்று சிமெண்ட் தரையில் படுத்து உறங்கியுள்ளார்.

அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். அந்த பெண் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் போலீசார் நுழையும் போது அவர் நிர்வாணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

போதிய உணவின்றி மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அந்த பெண்ணின் உடல்நிலை சரியான பின்பு அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவியோடு தகராறு... குழந்தைகளோடு விஷம் குடித்த கணவன்!

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு பவன்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் மகளுடன் வாணியம்பாடி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். உறவினர் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு மகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக வி‌ஷத்தை குடித்தார். உறவினர் வீட்டு அருகே சென்ற போது, தந்தையும், மகளும் மயங்கி விழுந்தனர்.
உறவினர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி பவன்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து 5 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த முதியவர்!

60 வயதான முதியவர் ஒருவர் 12 வயது சிறுமிக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து 20 வயது பெண்ணை போல மாற்றி 5 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பாண்டிச்சேரியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தியாரி கக்னர் என்ற 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக சட்ட ரீதியாக எந்த ஆவணங்களும் இல்லாமல் ஒரு சிறுமியை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

தினமும் அந்த சிறுமிக்கு திகாரி காக்னர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புதுவை குழந்தைகள் நல கமிட்டி தலைவர் டாக்டர் வித்யா ராம்குமாருக்கு இ-மெயில் மூலம் ரகசிய புகார் வந்துள்ளது.

இதையடுத்து வித்யா ராம்குமார் அவரது குழுவினருடன் அந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, திகாரி காக்னர் என்னை அடிக்கடி கட்டிப்பிடிப்பார். முத்தம் கொடுப்பார் என்று கூறினார்.

எனவே, பாலியல் தொல்லை நடந்திருப்பது உறுதியாக தெரிந்தது. இதனால் லாஸ்பேட்டை போலீசில் வித்யா ராம் குமார் புகார் கொடுத்தார். அதையடுத்து போலீசார் திகாரி காக்னர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் போலீசிடம் கூறியதாவது; நான் ஒடிசா சென்றிருந்தபோது, இந்த குடும்பத்தை சந்தித்தேன். அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தனர். மேலும் அந்த சிறுமிக்கு காலில் புண் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தாள்.

எனவே, அவளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், அவள் குடும்பத்துக்கு உதவுவதற்கும் அழைத்து வந்தேன். சிறுமிக்கு சிகிச்சை அளித்து நான் மகள் போல் பார்த்து கொண்டேன்.

அந்த வகையில் அவளுக்கு நான் முத்தம் கொடுப்பது உண்டு. எங்கள் நாட்டு கலாச்சாரப்படி முத்தம் கொடுப்பது தவறு இல்லை. நானும் பாசத்தில் தான் முத்தம் கொடுத்தேன். நான் பாலியல் தவறு எதுவும் செய்யவில்லை என கூறினார். ஆனால் இரவிலும் தன்னுடன் படுக்க வைத்து அந்த சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கிறார்..

அதுமட்டுமல்லாமல், 12 வயதான அந்த சிறுமிக்கு தொடர்ந்து ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி 20 வயதான பெண்ணை போல மாறி இருக்கிறார். இந்த விவகாரம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தெரியவர அந்த முதியவர் நாட்டை விட்டு தப்பித்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் அதிரடியாக அவரை தடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதால் புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தூதரக அதிகாரிகளும் போலீஸ் நிலையத்துக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அக்காவை கழுத்தை இறுக்கி கொன்ற தம்பி!

சென்னை பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் போஸ், டெய்லர். இவரது மூத்த மகள் சாந்தி. இளைய மகன் சங்கர்.இதில் சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று மாலை சாந்தி, திடீரென சங்கரின் மூக்கில் தாக்கி இருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சங்கர் இரும்பு கம்பியால் சாந்தியின் கழுத்தை இறுக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த தந்தை போஸ், மகளை நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது, சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்துவிட்டார்.