அமைச்சர்களின் வீட்டுவாடகை ஒரு லட்சமாக உயர்த்தப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்.  ஏற்கனவே அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.  ஓட்டு கேட்கும்போது பல வாக்குறுதிகளை அள்ளி கொடுக்கும் உறுப்பினர்கள்.  வென்று பதவிக்கு வந்தபிறகு மக்கள் பிரச்சனையை கண்டுகொள்வதில்லை,  ஹாயாக செட்டில் ஆகிவிடுகிறார்கள் என்பதுடன்,  மக்களுக்கு சேவகம் செய்ய வருகிறேன் என்று கூறுபவர்கள் கடைசியில்  மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பர குடியிருப்பு,  பங்களா,   உல்லாசம் அனுபவிக்கின்றனர் என்ற விமர்சனம் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் அரியானா மாநில முதலமைச்சர் மோகன்லால் கட்டார் ,  அமைச்சர்களின் வீட்டுவாடகை ஒரு லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார் .   அவரது தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கான சலுகைகள் சட்டத்தில்  திருத்தம் மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.  அந்த சட்டத்தில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு பிறகு அமைச்சர்களுக்கான வீட்டு வாடகை ரூபாய் 50 ஆயிரமாக இருந்த நிலையில் அது தற்போது ஒரு லட்சமாக உயர்த்தப் போவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,   அமைச்சர்களின்  வீட்டு வாடகை இரட்டிப்பாக உயர்த்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது 50 ஆயிரமாக இருந்து வரும் வீட்டு வாடகை கூடுதலாக 30,000 ஆயிரம் அதிகரித்து  80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ,  தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 1 லட்சம் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.