கமலஹாசன் போன்ற சுயநலவாதிகள் வந்துதான் தமிழக அரசியலை பலப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை….தடாலடி தமிழிசை…

நடிகர் கமலஹாசன் சுயநலம் மிக்கவர் என்றும், அவர் அரசியலுக்கு வந்துதான் தமிழகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக  பாஜக தலைவர் தமிலுசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தமிழக அமைச்சர்கள் கமலஹாசனை சரமாரியாக தாக்கிவருகின்றனர்.

கமலை கைது செய்ய வேண்டும்… அவர் முறையாக வரி செலுத்துகிறாரா என ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சர்கள் கமலை மிரட்டத் தொடங்கினர்.

இதையடுத்து,நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன், ரசிகர்கள் ஊழல் புகார்களை அனுப்புங்கள் என கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூட டெங்குவை ஒழிக்க முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியானர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, நடிகர் கமலஹாசன் சுயநலம் மிக்கவர் என்றும், அவர் அரசியலுக்கு வந்துதான் தமிழகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.