அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் 24ம் தேதி மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு நடைபெறுமா? என்ற ஐயம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்;- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம். 1 முதல் 9-ம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்களும், 10,11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதேசமயம் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 16, 2020, 11:15 AM IST