இந்த ஆண்டு ஹஜ் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் பயணிகள் மற்றும் வயதானவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதிஅரேபியா ஹஜ் பயணக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு இந்தியா அமெரிக்கா இத்தாலி பிரான்ஸ் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட உலகநாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருவதால்.. ஹஜ் பயணம் இந்த ஆண்டு அனைத்து நாடுகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் பயணிகளுடன் நடைபெறும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் மட்டுமே வசிப்பவர்கள், ஹஜ் செய்ய தயாராக உள்ளனர்.முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கபட்டு உள்ளது. நமது உடல்நலம் பாதுகாக்கும் வகையில் இஸ்லாத்தின் போதனைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கும்போது ஹஜ் பாதுகாப்பாக செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் செய்தனர், அவர்களில் 18 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.