ஐ.ஜே.கே  திமுக  உடன் இணைந்ததற்கு, பாஜகவுக்கு இழப்பு இல்லை, திமுகவிற்கு பலமும் இல்லை என எச். ராஜா விமர்சனம் செய்து உள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக இறங்கி, அவ்வப்போது கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில் அதிமுக தலைமையில் பாஜக,தேமுதிக,பாமக,புதிய தமிழகம், தமாகா என  கூட்டணி அமைத்து உள்ளது. திமுக தரப்பில்,காங்கிரஸ், மதிமுக, மாக்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என கூட்டணி அமைத்து உள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு10 தொகுதியும், முஸ்லீக், கொமதேக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்க திமுக முடிவு செய்து உள்ளது.

இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சி திமுக வில் இணைந்து உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ஐ.ஜே.கே திமுக உடன் இணைந்ததற்கு, பாஜகவுக்கு இழப்பும் இல்லை, திமுகவிற்கு பலமும் இல்லை என விமர்சனம் செய்து உள்ளார்.

அதாவது, தமிழகத்தில் பாஜக பலமான கூட்டணியை அமைக்கும் என தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அடிக்கடி நம்பிக்கையாக தெரிவிப்பார். தற்போது அதன் படியே பலமான கூட்டணி அமைத்து விட்டனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் திமுக பக்கம் அப்படி ஒன்னும் சொல்லும்படி பெரிய கட்சி அவர்களுடன் கூட்டணியாக இல்லை என்றே பரவலான கருத்து நிலவி வருகிறது.இருந்தாலும்,வரும் ஆனால் வராது என்ற கணக்கில் தேமுதிக திமுக உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இதுவரை கூட்டணி குறித்து இழுப்பறியாகவே உள்ளது.

அதே வேளையில் மதிமுக உடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது தேமுதிக ..ஆக மொத்தத்தில், தேமுதிகவின் நிலைப்பாடு பொறுத்தே எந்த கட்சி பலமாக உள்ளது என ஓரளவிற்கு யூகிக்க முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.