திமுக குடும்பம் ஒரு களவாணி குடும்பம். அவர் வழியில் வந்த ஸ்டாலின் பிரதமரையே குறை கூறி வருகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் பாரதிய பிஜேபி எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;  எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா வரை திமுக கட்சி தீயசக்தி என்பதை மக்கள் மனதில் தெளிவாக பதிவு செய்துள்ளனர். ஆகவே திமுகவோடு கைகோர்ப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது எம்ஜிஆர்,க்கும் ஜெயலலிதா க்கும் நினைவுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் எனக் கூறினார்.

முதன்முதலாக சென்னை மாநகராட்சிக்கு திமுக தரப்பில் பொறுப்பேற்றபோது துப்புரவு தொழிலாளர்களின் கூலியில் கைவைத்து திமுக தான். திமுக குடும்பம் ஒரு களவாணி குடும்பம். அவர் வழியில் வந்த ஸ்டாலின் பிரதமரையே குறை கூறி வருகிறார். திமுக கட்சி என்பது விஞ்ஞான அளவிற்கு ஊழல் செய்யும் கட்சி அப்படிப்பட்ட கட்சியோடு தினகரன் என்கிற தீய சக்தி கைகோர்ப்பது என்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம். , தற்போது நடைபெற இருக்கிற  சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக விற்கும், அமமுகவிற்கும்  முடிவு தெரியும் எனப் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர்; நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் பேச்சு மிகவும் வன்மையான பேச்சு, தமிழகத்தில் திமுக வெற்றி பெறாமல் போனால் கூட இந்த ஆட்சியை கலைத்துவிடுவேன் என்று அவர் கூறுவது வரைமுறை இல்லாத செயல் எனக் கூறியுள்ளார்.