ச்சும்மாவே சதிராடுவார் ஹெச்.ராஜா இந்த லட்சணத்தில், சபரிமலை கோவில் விவகாரம் வேறு சேர்ந்து கொள்ள விட்டா வைப்பார்? வெந்நீர் வார்த்தைகளில் வேக வைக்கிறார் கேரள காம்ரேடுகளை. 
விவகாரம் இதுதான்...

பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று சில நிகழ்வுகளுக்காக கோயமுத்தூர் சென்றிருக்கிறார். அப்போது சபரிமலை விவகாரம் குறித்து கேட்டபோது...

“இந்த நாட்டில் பெண்கள் மட்டும் செல்லக்கூடிய கோயில்களும் இருக்கின்றன. அங்கே ஆண்கள் செல்ல முடியாது. அதற்காக அங்கே ஆண்கள் போகட்டுமென்று தீர்ப்பு சொல்லிட முடியுமா? பாரம்பரியங்கள், பழைய சம்பிரதாயங்கள், ஆதி நடைமுறைகள் எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்கும். 

சபரி மலை கோயில் விவகாரத்தில் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் கேரளாவை ஆளும் பினராயியின் அரசு இவ்வளவு வேகம் காட்டுவது ஏன்? சிம்பிள், இந்துக்களின் மனதை  காயப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தினால்தான். உச்சநீதிமன்றம் சொல்கின்ற எல்லா தீர்ப்புகளையும் அப்படியே செயல்படுத்துகிறாரா பினராயி? இந்த விஷயத்தில் மட்டும் குதிக்கிறார் என்றால் உள் அர்த்தம் இந்து துவேஷம் மட்டுமே. 

பினராயி போல் ஒரு மட்டமான அரசியல்வாதியை நான் பார்த்ததில்லை. வட்டக்கல் எனுமிடத்தில் ஒரு நபரை ஆயுதம் ஏந்தி கொன்ற வழக்கில் பினராயி முதல் குற்றவாளி. இந்துக்களுக்கு எதிரான கொலை குற்றவாளியெல்லாம் முதல்வரானால் இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தானே பார்க்க முடியும். ப்ளூ ஃபிலிமில் நடித்த ரெஹானாவுக்கு போலீஸ் உடை அணிவித்துவிட்டு சந்நிதானத்தை நோக்கி அழைத்து செல்ல வைத்தது கேவலமான செயல். 

ஆனாலும் சொல்கிறேன், சபரியில் எங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுத்தே தீருவோம். நம்பிக்கைக்கும், நம்பிக்கை மறுப்புக்கும் இடையில் நடக்கும் இந்த யுத்தத்தில் நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும்.” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார் மனிதர். ராஜா ராஜாதான்!