நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர் சிவகங்கை மக்கள். எச்.ராஜா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதுள்ள ஈடுபட்டால், அதில் தீவிரமாக இயங்கியவர். பின்னர் பிஜேபியில் சேர்ந்த  எச்.ராஜாவுக்கு தேர்தல் களமும் புதிதல்ல, தோல்வியால் ஒண்ணுமே அவரை பாதிக்கப்போவதில்லை, சட்டமன்றம், நாடாளுமன்றம் என 5 முறை போட்டியிட்டார். இதில் ஒருமுறை மட்டுமே வெற்றிக்கனியைப் பறித்துள்ளார். 

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் திமுக - பிஜேபி கூட்டணியில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். அடுத்ததாக, 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - பிஜேபி கூட்டணியில் போட்டியிட்டு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2006 சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தோல்வி. 2014-ல் பிஜேபி- தேமுதிக அணியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி. 2016 சட்டமன்றத் தேர்தலில் தியாகராயநகரில் போட்டியிட்டுத் தோல்வி. அதன்பிறகு சாரணர் இயக்க தலைவர் தேர்தலில் 52 வாக்குகள் பெற்று படுதோல்வி. இப்போது மீண்டும் சிவகங்கைத் தொகுதியில் போட்டி இட்டு தோல்வி அடைந்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக டிவிட்டரில் சர்ச்சையாக எதையாவது தட்டிவிடும் பழக்கமுள்ள நம்ம  எச்.ராஜா, அந்த பிரச்சனை வெடித்ததும் அது நான் அவனில்லை, அவன் என்னுடைய அட்மின் என சால்ட்டா அள்ளிவிடும் அந்த தந்திரம் இருக்கே அப்பப்பா.... அப்படி ஒரு சமாளிப்பு! 

பெரியார் சிலை விவகாரம், மெர்சல் பட விவகாரத்தில் விஜய்யால் ஜோசப் விஜய் என சொன்னது, சர்கார் சர்ச்சை, கமலை கமலை முலையிலே கிள்ளி எறிய வேண்டும் என இவரது பேச்சுக்கள் இன்டர்நெட்டில் தாறுமாறாக ட்ரெண்டிங் ஆகும். அதோடு விட்டாரா? உயர்நீதிமன்றத்தை கூந்தல் உடன் தொடர்பு படுத்தி பேசிவிட்டு மறுநாள் எனது குரலை டப்பிங் செய்து வெளியிட்டு விட்டார்கள் என்றெல்லாம் புருடா விடுவார், இதை எதிர்த்து கேள்விக்கு கேட்டால் ஆன்டி இந்தியன்ஸ் என சொல்லி திசைதிருப்பிவிடுவார். 

இப்படியெல்லாம் கப்சாவிட்டு காலம் தள்ளிவந்த ஹெச்.ராஜா,நடந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியை அடம்பிடித்து வாங்கினார். எப்படியும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என அமித்ஷாவிடம் சத்தியம் பண்ணி வாங்கினார். அப்படித்தான் வாங்கினார் ஜெயிச்சாரா? அதான் இல்ல, இதை தமிழிசை ஸ்டைலில் சொல்லனும்னா வெற்றிகரமா மண்ணைக் கவ்வினார் என சொல்லலாம்.