காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுகவை குரங்கு குட்டி கதை சொல்லி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் விமர்சனம் செய்துள்ளார்.

 

காஷ்மீர் விவகாரத்தால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லி சந்தர் மந்தரில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் திமுக தலைமையில் 14 கட்சிகளை சேர்ந்த எம்.பி.,கள் கலந்து கொண்டனர். 

இந்தப் போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’குரங்குக்கு முன்னாடி கஞ்சி கலையத்தை வைத்தால் அது கை வைக்காது. குட்டியோட வால விட்டு பார்க்கும். குட்டி கத்தினா கஞ்சி சூடா இருக்கு என்று குரங்கு கை வைக்காது. இல்லேனா குரங்கு கஞ்சிய குடிக்க துவங்கும். இதுக்கும் டில்லி ஜந்தர் மந்தரில் ஸ்டாலின் அறிவிச்ச போராட்டத்திற்கும் தொடர்பில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். 

 

அதாவது இந்தப்போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், எங்கே தன் மீது பாஜகவுக்கு கோபம் வந்து நடவடிக்கை எடுத்து விடுமோ என அவர், தனது எம்.பிக்களை மட்டும் போராட்டத்தில் ஈடுபடவைத்து அதன் மூலம் நடவடிக்கை பாய்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு பிறகு இந்த விஷயத்தில் இறங்கலாம் என ஸ்டாலி பின் வாங்கியதாக அந்தப்பதிவில் கூறியுள்ளார்.