உயர்நீதிமன்றம் குறித்து  இழிவாக பேசியது தொடர்பாக  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உட்பட 8 பேரை கைது செய்ய 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார்குடியில் இருந்த எச்.ராஜா தற்போது அங்கிருந்து தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து எச்.ராஜா இன்று  கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகைவைச் சேர்ந்த தலைவர்கள் சட்டம், நீதிமன்றம், பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் என யாரையும் மதிக்காமல் பேசுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோ, நடவடிக்கை எடுப்பதோ என எந்த நடவடிக்கையையும் தமிழக அரசோ, போலீசோ எடுப்பதில்லை. பெண் பத்திரிக்கையாளர்களை கேவலமாக பேசிய பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கடைசி வரை கைது செய்யப்படவுமில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை.

இதே போல் எச்,ராஜா தனது முகப்புத்தகம், டுவிட்டர் போன்றவற்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் புதுக்கோட்டைமாவட்டம்மெய்யப்புரத்தில்நேற்றுநடந்தவிநாயகர்சதுர்த்திஊர்வலத்தில்கலந்துகொண்டபாஜகதேசியசெயலாளர்எச்ராஜா, போலீசாரிடம்வாக்குவாதத்தில்ஈடுபட்டார். அப்போது, சென்னைஉயர்நீதிமன்றம்குறித்துஅவர்கீழ்தரமாகபேசியவீடியோகாட்சிகள்இணையத்தில்வெளியாகிவைரலாகபரவிவருகின்றது. மேலும் போலீசார் குறித்தும் எச்.ராஜா அவதூறாக பேசியிருந்தார்.

இதற்கிடையே, திருமயம்போலீசார்உயர்நீதிமன்றம்குறித்துஅவதூறாகபேசியதுதொடர்பாகஎச். ராஜாஉள்பட 8 பேர்மீதுஇன்றுவழக்குபதிவுசெய்தனர். அவர்களின்மீதுசட்டத்தைமதிக்காதது, இருதரப்பினருக்குஇடையேமோதலைதூண்டுவது, நீதிமன்றத்தைபற்றிஅவதூறாகபேசியதுஎன 8 பிரிவுகளின்கீழ்வழக்குபதிவுசெய்யப்பட்டுள்ளது



இந்நிலையில், எச். ராஜாஉள்பட 8 பேரைகைதுசெய்வதற்காகஆய்வாளர்மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர்கருணாகரன்தலைமையில் 2 தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த எச்.ராஜா, மன்னார்குடியில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜகதேசியசெயலாளர்எச்.ராஜாஇன்று கைதுசெய்யப்படலாம்என தெரிகிறது.