h raja criticize minister vijayabaskar

கிறிஸ்தவ பள்ளிகளில் ஒழுக்கம் கற்றுத்தரப்படுகிறது என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்வியோடு சேர்த்து ஒழுக்கமும் கற்று தரப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். மேலும் தானும் ஆர்சி பள்ளியில்தான் படித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் கருத்தை எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீதிபோதனை வகுப்புகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்த ஈவேரா கூட்டம் கிறிஸ்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்றுத்தருகின்றன என மதமாற்ற ஏஜெண்டாக மாறியுள்ளனர் எனவும் விஜயபாஸ்கரின் பேச்சு கண்டித்தக்கது எனவும் பதிவிட்டுள்ளார்.