மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்கத் தயார் என்று பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று திமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.  

கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். மேலும் மோடி அரசை அகற்றுவோம்.. மதவெறி அரசை அகற்றுவோம் என்று கூறினார். இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக எச்.ராஜா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என்றார். இதேபோல் மேலும் டிவிட்டர் பதிவில் காவிகளின் சக்தியை காட்ட 2.9.18 வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வாரீர் என்று பதிவிட்டுள்ளார்.