நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி, காடுவெட்டி குருவின் பிறந்த நாள் என்பதால் அவரது சமாதியில் குருவின் மகன் கனலரசனும் மருமகன் மனோஜ்கிரண் மற்றும் வழுதூர் மணி ஆகியோர் திரண்டு, புதிய வன்னியர் சங்கம் உருவாகி நாளை பெரும் விழாவாக நடத்தத் திட்டம் போட்டதால் வன்முறையைத் தூண்ட சில சக்திகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் 144 தடை விதித்தார்.

இதற்கிடையே  நேற்று காலை 9 மணி முதல் 10 மணி வரை மலர் தூவி மரியாதை செலுத்த அனுமதி அளித்திருந்த நிலையில், குருவின் தங்கையை ஊருக்குள் அனுமதிக்காததால் போலீசார் முன்னிலையில் வன்முறையை தூண்டும் விதமாக ஆக்ரோஷமாக திட்டி பேசியிருந்தார்.

ராமதாஸ் குடும்பத்தின் மீதிருந்த கோபத்தில், ஆக்ரோஷம் அனல் தெறிக்கும் விதமாக திட்டி தீர்த்திருந்தார் மாவீரனின் தங்கை,  உங்க உடம்புல ஓடுறது வன்னிய ரத்தமா இருந்தா போய் வெட்டுங்கடா... அவன் வன்னியனா? வன்னிய மக்களை வாழ வச்சனா? வன்னிய இனத்தையே அழிக்கிறான் என குருவின் தங்கை ஒருமையில் அசிங்க அசிங்கமாக திட்டும் வீடியோ வலைத்தளங்களில் வேகமாக வைரலாகிக்க கொண்டிருக்கிறது.

அன்னைக்கு ப....சி மாதிரி வந்தான், அப்போ எங்க அண்ணன்  குரு தான் தமிழ்நாட்டுக்கு அறிமுக படுத்தினார். எங்க அண்ணன் இல்லாம கட்சி வளர்ந்திருக்குமா? ? போனவருஷம் இருந்தும் பிறந்தநாள் கொண்டாட விடல, இந்த வருஷம் இறந்தும் பிறந்த நாள் கொண்டாட விடல என சராமாரியாக  டாக்டர் ராமதாஸை திட்டி தீர்த்துள்ளார். 

இதோ அந்த வீடியோ;