ரஜினியை தன் குருநாதராக கருதுபவர் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ரஜினி அரசியல் வருகைக்கு முழுக்கு போட்டவுடன் லாரன்ஸ் ரியாக்ஸன் என்னவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று டிசம்பர் 3-ம் தேதி அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கிற்காக  ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் உடன் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ மனையில் சிகிச்சை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்து விட்டார். இந்நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், “குருவே நீங்கள் எடுத்த முடிவு 100% சரி. மற்ற அனைத்தையும் விட உங்களின் உடல் நலம் தான் முக்கியம். உங்களை நம்புபவர்கள் மீது அக்கறை கொண்டு சுயநலமில்லாத ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள்" என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.