இந்த கோர விபத்தில் ஆற்று நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமானவர்களை மீட்கும் பணிகள் விடிய விடிய தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேபிள் பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26-ம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில், கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
இதையும் படிங்க;- கேபிள் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு

இந்த விபத்து தொடர்பாக உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த கோர விபத்தில் ஆற்று நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமானவர்களை மீட்கும் பணிகள் விடிய விடிய தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கேபிள் பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். ஆற்றில் விழுந்து காணாமல் போனவர்களை விரைந்து மீட்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்கிய போலீஸ்? பிரபல ரவுடிகள் 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை.!
