அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற தமிழக அரசு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 04.010.2007 அன்று துவங்கப்பட்டு இதற்கென தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் தலைமுனைகள் அமைக்கப்பட்டன. குறைந்த விலையில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உடுமலை ராதாகிருஷ்ணனை அப்போதைய முதலமைச்சர்  அரசு கேபின் டி.வி.நிறுவன தலைவராக நியமித்தார். 

இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தில் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவராக  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்