Asianet News TamilAsianet News Tamil

ஏழு பேர் விடுதலையில் ஆளுனர் நல்ல முடிவு எடுப்பார்...!! கிளிப்பிள்ளைபோல் சொன்னதையே சொல்லும் சிவி. சண்முகம்...!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அரசு எதிர்பார்க்கிறது என்றார் . 

governor will take good decision  on 7 tamils release mater - tamilnadu minister cv shanmugam
Author
Villupuram, First Published Feb 12, 2020, 6:04 PM IST

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேர் விடுதலை  விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார் .முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள முருகன் சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9 தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .  இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அது அனுப்பிவைக்கப்பட்டது .

governor will take good decision  on 7 tamils release mater - tamilnadu minister cv shanmugam

ஆனால் இதுவரை கவர்னர் அந்த தீர்மானத்திற்கு இதுவரை  ஒப்புதல் அளிக்கவில்லை ,  இந்நிலையில் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .  7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது , கவர்னருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது ,  மேலும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து கவர்னரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல என அவர் தெரிவித்தார் .  அதேபோல்  7 பேர் விடுதலை குறித்த கோப்பு இத்தனை மாதம் ஏன் கிடப்பில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார் , அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவர்னருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது என பதில் அளித்தார். 

   governor will take good decision  on 7 tamils release mater - tamilnadu minister cv shanmugam

இந்நிலையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரிடம் முறையிட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அரசு எதிர்பார்க்கிறது என்றார் .  இந்த விவகாரத்தில் நளினியை  தவிர்த்து மற்றவர்களை தூக்கிலிடலாம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சியினர் எல்லாம் வெறும் வாயால் முழம் போட்டுக்கொண்டு விமர்சித்து பேசுகின்றனர் .  7 பேர் விடுதலைக்காக திமுக அரசு காலத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்கள் இது பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் என்று அவர் காட்டமாக கூறினார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios