கவர்னர் வரம்புமீறல் ஓயாது போல..

நான் சைவ உணவு உண்பதால், ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன்
- சென்னை கலைவாணர் அரங்கில் மகாவீர் விருதுகள் வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் பேச்சு..

இது பச்சை அயோக்கியத்தனம் மட்டுமல்ல, கேடு கேட்ட சர்வாதிகாரத்தனத்தின் உச்சம்... யார் என்ன வகை உணவு உண்ண வேண்டும் என்று நிர்ணயிக்க ராஜ்பவன் என்ன புரோகித்தின் சொந்தா வீடா? சொந்த வீட்டிலேயே மனைவி மக்கள் இதைத்தான் சாப்பிடவேண்டும் என்று நிர்பந்தித்தால், ''ஆனா ஊணா இவன் தொல்லை தாங்கமுடியலை'யே'ன்னு தலையில் அடிச்சிகிட்டு, ஆள் வெளியே போன பிறகு அவர்களுக்கு விரும்பியதை சாப்பிடுவார்கள்.

இப்படித்தான் காந்திய வாதின்னு சொல்லிகிட்டு 1977ல கவர்னரா வந்த பிரபுதாஸ் பட்வாரி அவர் இஷ்டத்திற்கு கடுமையான விதிகளை கொண்டு வந்து இம்சை பண்ணாரு. விருந்தினர்களாக வந்த விஜபிக்கள், ராஜ்பவனில் தங்குவதை தவிர்த்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கி அரசாங்கத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக பெரிய சர்ச்சைகள் ஓடின.

கவர்னர் அவருக்கான அசைவ உணவுகளை தவிர்த்து செலவை குறைத்தார் என்று சொன்னால் ஒரு யோக்கியத்தனம் உண்டு.. இப்போ ராஜ்பவனை சைவ பவனா மாற்றியவர். அப்படியே அவர் பேருக்கு ராஜ்பவனை பத்திரப்பதிவு செய்துவிட்டுபோகட்டும்.

தமிழ்நாட்டின் ராஜ்பவன் என்பது ஒரு வீணா போன இடம்தானே? பல கவர்னர்கள் அப்படித்தான் அதை ஆக்கி வைத்திருக்கிறாகள். அதனால் நாங்கள் ஏன் கவலைப்படப்போகிறோம்.

முகநூலில்... வெங்கடேசன்