government buses will be run in thoothugudi

தூத்துக்குடியில் மக்கள் போராட்ட்த்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு 144 தடை உத்தரவையும் அமலில் வைத்திருந்த்து. தூத்துக்குடியில் நடந்த படுகொலையை கண்டித்து பலரும் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அர்சு தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்கிற முடிவை அறிவித்தது. இன்று அனைத்துக்கட்சிகளின் சார்பாக மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்காது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் படிப்படையாக காவல்துறையினர் எண்ணிக்கையும் குறைக்க அரசு முன்வந்துள்ளது. என ஆட்சியர் தெரிவித்தார்.