மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.

இதனிடையே திமுக, மதிமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் ஹிந்தி படித்தால் அவர்களது குழந்தைகளின் டிசியை வாங்கி தமிழ் பள்ளியில் சேர்க்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதற்கு எதிப்ப்புத் தெரிவித்து ஹெச்.ராஜாவுக்கு நெத்தியடி கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். 

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தமிழன்தான்... ஆனால், அவருக்கு தமிழ் தவிர்த்து ஆங்கிலமும் தெரியும்... அதனால் தான் அவர் அங்க இருக்காரு...  இந்தி படிச்சு என்ன ஆகப் போகுது? அதைப் படிச்சா நாளைக்கே இங்கே உள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு வேலை உடனே கிடச்சுடுமா? உறுதிபடுத்துங்க! வடநாட்டுக்காரங்க தமிழ் படிப்பாங்களா? இன்னிக்கு தமிழன் உலகெங்கும் போய் வேலை செய்யுரான்னா என்ன அர்த்தம்?அதுக்கு ஆங்கிலம் போதும்னு அர்த்தம்! ’’ எனவும் இதை சொல்வதெற்க்கு உனக்கு தமிழ் தேவை படுது பாத்தியா! அதுதான் ராசா தமிழ்.

’முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுதுங்கள் ஐயா...’ ’விருப்பத்திற்கும்,  கட்டாயத்திற்கு விபரம் தெரியாதவரா தாங்கள், பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில் அலுவல் மொழி இருக்கே தவிர ஆட்சி மொழியோ தேசிய மொழியோ இல்லையென்று தெரியாத தேசிய தலைவரா தாங்கள். மூன்றாம் மொழி விருப்ப மொழி  என்று அறிவியுங்கள். வழி பிறக்கும்’  

இந்தி படிச்சு என்ன ஆகப் போகுது? அதைப் படிச்சா நாளைக்கே இங்கே உள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு வேலை உடனே கிடச்சுடுமா?உறுதிபடுத்துங்க! வடநாட்டுக்காரங்க தமிழ் படிப்பாங்களா?இன்னிக்கு தமிழன் உலகெங்கும் போய் வேலை செய்யுரான்னா என்ன அர்த்தம்?அதுக்கு ஆங்கிலம் போதும்னு அர்த்தம்! 

சொன்னா கேளுங்கடா தமிழ் மட்டும் தெரிஞ்சிட்டே இந்த அளவுக்கு பண்றோம் இந்தியும் கத்துக்கிட்டா நீங்க நாண்டுகிட்டு சாகுற அளவுக்கு கலாய்ப்போம்... Beware of tamilans’ என்றெல்லாம் ஹெச்.ராஜாவை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.