Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுக்கு குட்பை... பாஜக வேண்டாம்... ரஜினி பக்கம் திரும்பும் ஏசிஎஸ்..!

வேலூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டிருந்த ஏசி சண்முகத்திற்கு ரஜினியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஆறுதலை அளித்துள்ளது.

Goodbye to AIADMK ... Don't BJP... ac shanmugam master plan
Author
Tamil Nadu, First Published Aug 14, 2019, 10:16 AM IST

வேலூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டிருந்த ஏசி சண்முகத்திற்கு ரஜினியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஆறுதலை அளித்துள்ளது.

எப்படியாவது எம்பியாக மத்திய அமைச்சராகி விட வேண்டும் என்பது தான் கடந்த 10 வருடங்களாக ஏசி சண்முகத்தின் தீராத ஆசையாக உள்ளது. கடந்த 2004 தேர்தல் சமயத்திலேயே கலைஞருடன் கூட்டணி குறித்து பேசி அப்போதே வேலூர் தொகுதியை கேட்டார் ஏ.சி.எஸ். ஆனால் அந்த தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு அப்போது நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருந்தது.Goodbye to AIADMK ... Don't BJP... ac shanmugam master plan

இதனால் 2004 தேர்தலில் சுயேட்சையாக கூட போட்டியிட ஏசி சண்முகம் முடிவு செய்தார். பிறகு ஒரு சில காரணங்களால் அந்த முடிவை ஒத்திவைத்தார். இதற்கிடையே 2009 தேர்தலிலும் வேலூரில் களம் இறங்க ஆயத்தமானார். ஆனால் வலுவான கட்சிகள் எதுவும் க்ரீன் சிக்னல் கொடுக்காத காரணத்தினால் ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் 2014ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக – தேமுதிக- பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன.

இந்த கூட்டணிக்காக பாஜக சார்பில் தேவையான செலவுகள் பெரும்பாலானவற்றை அப்போது ஏசி சண்முகமும் மற்றொரு தொழில் அதிபரும் செய்தனர். அந்த வகையில் வேலூரில் பாஜக சின்னத்தில் போட்டியிட ஏசி சண்முகத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த தொகுதியில் கணிசமான வாக்குகளை பெற்றும் வெற்றி பெற முடியாத சூழல் ஏசி சண்முகத்திற்கு கிடைத்தது. Goodbye to AIADMK ... Don't BJP... ac shanmugam master plan

இந்த நிலையில் வேலூரில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கிய நிலையிலும் வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் ஏசி சண்முகம். தோல்வி என்கிற தகவல் அறிந்த உடன் வீட்டுக்கு சென்றவர் தான் இரண்டு, மூன்று நாட்களாக வெளியே வரவே இல்லை. அப்போது ரஜினி தொலைபேசியில் அழைத்து ஏசி சண்முகத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். அதோடு அரசியல் ரீதியான சில விஷயங்களையும் ரஜினி கூறியுள்ளார்.

 Goodbye to AIADMK ... Don't BJP... ac shanmugam master plan

இதனை தொடர்ந்தே செய்தியாளர்களை சந்தித்து தனது தோல்விக்கு முத்தலாக் தடை மசோதா மற்றும் காஷ்மீர் விவகாரம் காரணம் என்று பேசியுள்ளார் ஏசி சண்முகம். அதோடு மட்டும் அல்லாமல் முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் அதிமுக ஆதரித்தது, காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டதும் தனது தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார் ஏசி சண்முகம். Goodbye to AIADMK ... Don't BJP... ac shanmugam master plan

அதாவது அதிமுக – பாஜகவோடு இனி உறவு கிடையாது என்கிற முடிவில் தான் வெளிப்படையாக இந்த இரண்டையும் எதிர்த்து பேசியுள்ளார் சண்முகம். மேலும் இனி அதிமுக, பாஜகவுடன் இருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என்கிற முடிவுக்கு வந்துள்ள ஏசி சண்முகம் தனது நண்பர் ரஜினி ஆரம்பிக்கும் அரசியல் கட்சியில் முக்கிய பதவியை பெற காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். விரைவில் ரஜினியையும் சண்முகம் சந்தித்து பேச உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios