Asianet News TamilAsianet News Tamil

'நல்ல' அரசியல்வாதி ஓ.பி.எஸ். ; ராமதாஸ் கிண்டல்

Good politician OPS Ramadoss Tease
'Good' politician OPS ; Ramadoss Tease
Author
First Published Sep 21, 2017, 5:22 PM IST


எங்களைப்போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், ஆசிரியர்கள் வேண்டாம் என்றும் ஜெயலலிதா, தினகரன் போதும் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்களில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்ச்ர செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

ராமதான் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளதற்கு, உலகில் யாருக்கும் அடங்காத அமைப்பு என்றால் அது கர்நாடக அரசுதான் என்று கூறியுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தற்கான விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை என தமிழக அரசு கூறியுள்ளதற்கு, 15 ஆண்டுகளாக அரசு செயல்படும் லட்சணம் இதுதான் என்று அதில் பதிவு செய்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, எங்களைப்போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு ராமதாஸ், அரசியல்வாதிகளை உருவாக்க ஆசிரியர்கள் வேண்டாம் என்றும் ஜெயலலிதா, தினகரன் போதும் என்று குறிப்பிடும் வகையில் டவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios