Asianet News TamilAsianet News Tamil

இறைச்சி பிரியர்களுக்கு செம்ம செய்தி.. விரைவில் புலி- சிங்கம் இறைச்சி உண்ணும் வாய்ப்பு.. ஆய்வகத்தில் சோதனை.

இறைச்சி பிரியர்களுக்கு விரைவில் புலி, சிங்கத்தின் இறைச்சியை உண்ணும் வாய்ப்பு  உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோன்ற இறைச்சிகளை ஆய்வகத்தில் தயாரிக்க முடியும் என்றும்,  விரைவில் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட  இறைச்சிகள் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

 

Good news for meat lovers .. Opportunity to eat tiger-lion meat soon .. Lab test going.
Author
Chennai, First Published Apr 2, 2022, 11:12 AM IST

இறைச்சி பிரியர்களுக்கு விரைவில் புலி, சிங்கத்தின் இறைச்சியை உண்ணும் வாய்ப்பு  உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோன்ற இறைச்சிகளை ஆய்வகத்தில் தயாரிக்க முடியும் என்றும்,  விரைவில் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட  இறைச்சிகள் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

ஆய்வக இறைச்சியில் செய்யப்பட்ட பர்கர் , சுஷி, ஸ்டிக்ஸ்  போன்றவற்றை விரைவில் மக்கள் ருசி பார்க்கலாம் என பிரைவல் ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை உணவுகள் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று பிரைவல் ஃபுட்ஸ் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் சிங்க  இறைச்சி,  லயன் மீட் பர்கர் மற்றும் ஜீப்ரா சுஷி  போன்றவற்றை விரைவில் மக்கள் சாப்பிடுவதை காணலாம் என்றும் ஆனால் இதற்காக எந்த மிருகமும் வதைக்கப்படாது  என்றும் இந்த இறைச்சிகள் அனைத்தும் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது

தி இண்டிபெண்டன்ட் செய்தியின்படி, இது ஹைடெக் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியாக இருக்கும் என்றும், உணவு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் பிரைவல் ஃபுட்ஸ்  என்ற நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்  இந்த வகை இறைச்சிகள் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் என்றும் இதில் எந்த மிருகத்திற்கும் கொடுமை செய்யப்படாது என்றும் லயன்ஸ் பார்க்கர், டைகர் ஸ்டிக்ஸ் மற்றும் ஜீப்ரா சுஷி ரோல்ஸ் ஆகியவை புதிய உணவுகளாக கிடைக்க இருக்கிறது என்றும் இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரலாம் என்றும்  இதே நேரத்தில் மக்களுக்கு ஒட்டகச்சிவிங்கி ஆம் மற்றும் யானை எண்ணெய் விரைவில் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

புதிய உணவுகளை தேடும் மக்கள்: 

லண்டனில் மிச்செலின் ஸ்டார் பிரிவில் இந்த உணவுகளை வழங்கும் முதன்மை உணவகமாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது பெரிய அளவில் பரவும் என்றும் இது உள்ளூர் சந்தை மற்றும் பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கும் என்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.  மறுபுறம் பிரைவல் ஃபுட்ஸ்  உரிமையாளர்களில் ஒருவரான யில் மாஸ் போரா கூறுகையில் மக்கள் தொடர்ந்து புதிய உணவுகளைத் தேடுகிறார்கள், புதிய உணவகங்களை தேடுகிறார்கள் ஆனால் இந்த இறைச்சியின் வருகையால் மக்கள் மாட்டு இறைச்சி கோழி, பன்றி இறைச்சி உணவுகளை தாண்டி சிந்திப்பார்கள் என்றும்  இந்த வகை இறைச்சிகள் இயற்கையை சுற்றுச் சூழபை பாதிக்காது என்பது இதன் சிறப்பு எனக் கூறியுள்ளார்.

இந்த வகை இறைச்சியின் சிறப்பு என்ன:

ஆய்வகத்தில் தயாரிக்கப்படுவதால் விலங்குகள் கொள்ளப்படுவதில்லை, இந்த இறைச்சி நேரடியாக விலங்கு உயிரணுக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது, அதை உருவாக்கும் உற்பத்தியாளர்கள் உண்மையான இறைச்சியின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதில் சரிவிகித அளவில் இடம்பெற செய்வார். இருப்பினும் இந்த ஆய்வக இறைச்சி இன்னும் தொழில்துறை மட்டத்தில் தயாரிக்கப்படவில்லை அதனால் அதன் பலன்கள் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியே? இருப்பினும் இதுவரை வெளிவந்துள்ள ஆய்வுகள் வழக்கமான இறைச்சியைவிட ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட இறைச்சி சுற்றுச் சூழலுக்கு குறைந்த அளவிலேயே சேதத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. கிரின் ஹவுஸ் எபெக்ட் (பசுமை இல்ல வாயுக்களின்) வெளியேற்றம் 68 முதல் 97 சதவீதம் வரை குறைக்கலாம் என்றும், அதே சமயம் நிலத்தின் பயன்பாடு 99 சதவீதம் குறையும் இதேபோல் தண்ணீர் பயன்பாடு 82 சதவீதம் முதல் 96 சதவீதம் வரை  குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன: 

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் படி புதிய ஸ்டார்ட் ஆப் பற்றிய பேச்சுக்கள் உள்ளது, ஆனால் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பியாண்ட் மீட் நிறுவனத்தின் பங்கு 2021 கடைசி மூன்று மாதங்கள் 6 பில்லியன் முதல் 110 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பை சந்தித்து இருக்கிறது.  இப்போது பிரைவல் ஃபுட்ஸ் இந்த சரிவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அந்த இடத்தை நிரப்ப முயற்சித்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios