Asianet News TamilAsianet News Tamil

கோதாவரி-காவிரி இணைக்கலாம்னு பிளான் சொன்னதே நாங்க தான்... இது எங்க கனவு!! நிதின் கட்கரிக்கு நன்றி சொன்ன ராமதாஸ்

பாமகவின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருப்பது தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ்.

Godavari-Kaveri Planning to connect Plan said ... It's our dream !! Ramdas thanked Nitin Gadkari
Author
Chennai, First Published May 27, 2019, 3:38 PM IST

பாமகவின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருப்பது தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ்.

Godavari-Kaveri Planning to connect Plan said ... It's our dream !! Ramdas thanked Nitin Gadkari

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு வரும் 30ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Godavari-Kaveri Planning to connect Plan said ... It's our dream !! Ramdas thanked Nitin Gadkari

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், “பாமகவின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருப்பது தனிப்பட்ட முறையில் பாமகவுக்கு கிடைத்த வெற்றியாகும்.

Godavari-Kaveri Planning to connect Plan said ... It's our dream !! Ramdas thanked Nitin Gadkari

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பாமக முன்வைத்த 10 கோரிக்கைகளில் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமான கோரிக்கை ஆகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

Godavari-Kaveri Planning to connect Plan said ... It's our dream !! Ramdas thanked Nitin Gadkari

இந்தியாவின் வற்றா நதிகளில் ஒன்றான கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இது தமிழகத்திற்கு கர்நாடக தர வேண்டிய காவிரி ஆற்று நீரின் அளவை விட 6 மடங்கு அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நதிகள் இணைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு குறைந்தது 200 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக இருக்கும் என்று கூறியுள்ள ராமதாஸ்,

Godavari-Kaveri Planning to connect Plan said ... It's our dream !! Ramdas thanked Nitin Gadkari

இது தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேளாண் தேவையை மட்டுமின்றி, குடிநீர் தேவையையும் நிறைவேற்றும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Godavari-Kaveri Planning to connect Plan said ... It's our dream !! Ramdas thanked Nitin Gadkari

மேலும், “நரேந்திர மோடி அரசு மீண்டும் அமையவிருக்கும் நிலையில், அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பாமக நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios