பிரதமர் மோடியை மீண்டும் சூடேற்றும் 'கோ பேக் மோடி'.... டிரெண்டிங்கில் முதலிடம்..!

பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில் 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் 2-வது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gobackmodi trending

பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில் 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் 2-வது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் 'கோ பேக் மோடி 'முதலிடத்தை பிடித்துள்ளது. 

பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போதும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி, கருப்பு பலூன் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் வரும் போதும் 'கோ பேக் மோடி' ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் இருப்பது வழக்கமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை மோடி தமிழகம் வந்து சென்றுவிட்டார். அப்போதும் 'கோ பேக் மோடி' ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. gobackmodi trending

இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவரது அவருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் 'கோ பேக் மோடி' ஹேஷ்டேக்கை மீண்டும் டிரெண்டிங் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த முறை 'கோ பேக் மோடி'-க்கு பதில் 'கோ பேக் சாடிஸ்ட் மோடி' என்பது தமிழகத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. gobackmodi trending

தற்போது தமிழக டிரெண்டி்ங்கில் 'கோ பேக் சாடிஸ்ட் மோடி' முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக்கும், 4-வது மற்றும் 6-வது அவரை வரவேற்று 'வெல்கம் மோடி' 'நமோ மோடி' ஆகிய ஹேஷ்டேக்குள் டிரெண்டங்கில் உள்ளன. பிரதமர் மோடியை முதன்முதலில் திமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 'மோடி ஒரு சாடிஸ்ட்' என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அந்த வார்தையே இப்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios