திருச்சி, துறையூர், கண்ணனூர் அங்காளம்மன் கோவில் பூசாரியை கருவறைக்குள் புகுந்து தாக்கும் திமுக பிரதிநிதி லெனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஓ.சி பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்குவது, இணாமாக செல்போன் கேட்டு கடையை உடைப்பது, பியூட்டி பார்லருக்குள் சென்று பெண்களை உதைப்பது, நிலத்தை அபகரிப்பது, கறிக்குழம்பில் எலும்பு இல்லை என ஹோட்டல் சர்வருக்கு பளார் விடுவது என அத்தனை விதமான அட்டகாசங்களிலும் எதிர்கட்சியாக இருக்கும் திமுகவினர் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் பூசாரி ஓம்பிரகாஷை, கருவறைக்குள் புகுந்து, திமுக ஒன்றிய கவுன்சிலர் பேபியின் கணவர் லெனின் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

கண்ணனூர் கிராமத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த காசிராஜனின் மகன் கண்ணனூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் பேபியின் கணவர் இந்த லெனின். அங்காள பரமேஸ்வரி கோயிலில் பூஜை செய்பவர் துறையூர் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ஓம் பிரகாஷ்.

 

கோவில் கருவறைக்குள் புகுந்து கோவில் பூசாரியை தாக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள திமுகவிற்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.