ம.நடராஜன் நலமுடன் உள்ளார் எனவும், நடராஜனுக்கு பெருத்தப்பட்டுள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிறப்பாக செயல்படுவதாகவும், குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

இதனிடையே நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற அவரது மனைவி சசிகலா வெளியே வந்தார். நேற்று முன்தினம் சசிகலா அவரை சந்தித்து நலம் விசாரித்தார். 

இந்நிலையில், ம. நடராஜன் உடல்நிலை குறித்து குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், ம.நடராஜன் நலமுடன் உள்ளார் எனவும், நடராஜனுக்கு பெருத்தப்பட்டுள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிறப்பாக செயல்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நடராஜனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், நடராஜன் சிறப்பு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.