Asianet News TamilAsianet News Tamil

கொடுக்குறதை கொடுங்க... இரட்டை இலையிலேயே நிற்கிறோம்... அதிமுக கூட்டணியில் ஏ.சி. சண்முகம் தாராளம்..!

அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், புதிய நீதி கட்சி குறைந்த  தொகுதிகளைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது.
 

Give what you give... we are standing on a double leaf... A.C. Shanmugam is generous ..!
Author
Chennai, First Published Mar 2, 2021, 8:35 AM IST

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. 

Give what you give... we are standing on a double leaf... A.C. Shanmugam is generous ..!
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் தமாகா, புதிய நீதி கட்சி போன்ற கட்சிகள் எப்போது பேச்சுவார்த்தையை அதிமுக  தொடங்கும் என்ற அக்கட்சிகள் காத்திருக்கின்றன. தமாகா 12 தொகுதிகள் வரை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தொகுதி பங்கீட்டில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்  ஏற்கனவே அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தொடக்கத்தில் 8 தொகுதிகள் கேட்ட புதிய நீதி கட்சி, தற்போது 6 தொகுதிகளுக்கு இறங்கிவந்துவிட்டது. அதைவிட சற்று குறைத்துக் கொடுத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அக்கட்சி வந்துவிட்டது கூறப்படுகிறது.Give what you give... we are standing on a double leaf... A.C. Shanmugam is generous ..!
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக போன்ற கட்சிகளுக்கே குறைந்த தொகுதிகள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், இந்த நிலைப்பாட்டை புதிய நீதி கட்சி எடுத்துள்ளதாக தெரிகிறது. குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள புதிய நீதி கட்சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios