எஸ்.சி இட ஒதுக்கீட்டை கருணாநிதியின் குடும்பத்திற்கு கொடுங்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி கொந்தளித்துள்ளார்.

இது குறித்த அவரது டவிட்டர் பதிவில், ‘’தலித் என்ற முத்திரை வேண்டாம். எஸ்.சி பட்டியலில் கிடைக்கும் இட ஒதுக்கீடு வேண்டாம். வன்கொடுமை சட்ட பாதுகாப்பான பிசிஆர் வேண்டாம். எங்கள் அடையாளம் போதும், உழைத்து முன்னேறி கொள்கிறோம்’’ எனப் பதிவிட்டு இருந்தார். 

இதனை விமர்சனம் செய்திருந்த சவுக்கு சங்கர், ’’இதைச் சொல்ல நீங்கள் யார்? உன்னை ஒட்டு மொத்த பள்ளர் இனத்தில் பிரதிநிதி என நினைத்துக் கொண்டாயா? நீங்களும் உங்கள் தந்தையும் சங்கிகளின் கால் தடத்தை பின் பற்றும் வீரர்கள். ஆகையால் பிராமணரின் காலை பிடித்து நிற்காமல் தயவு செய்து சொந்தக் காலில் நில்லுங்கள். தலித் சாதியை வைத்து விளையாடாதீர்கள்’’ என விமர்சித்து இருந்தார். 

 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’எங்களை தலித் என சொல்ல நீ யார்? உனக்கும் எஸ்.சி பட்டியல் வெளியேற்றத்திற்கும் என்ன தொடர்பு? நீயும் சூத்திரன் தானே? உனக்கு மட்டும் சாதி பெருமையுடன் இடஒதுக்கீடு ஆனால் நாங்கள் மட்டும் தலித், தாழ்த்தபட்டவர் முத்திரையோடு இருக்கணும்? தி.மு.க.,விற்கு சொம்பு தூக்குவதற்கு பதில் வேற தொழில் செய், எங்க கிட்ட வேண்டாம்’’ எனக் கொந்தளித்துள்ளார். 

 

முன்னதாக ஷ்யாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘’கருணாநிதி குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு இருந்தும், உங்க தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் பி.ஏ வரலாறு மட்டுமே கிடைக்கும் அளவுக்கு தத்தியாக இருக்கிறார்களே... அவர்களுக்கு கொடுங்கள் எஸ்.சி இட ஒதுக்கீட்டை’’ ஆத்திரமடைந்துள்ளார் ஷ்யாம் கிருஷ்ணசாமி.