கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் விக் முடி வைத்து செம ஸ்டைலாக யூத்தாக மாறி காட்சியளித்தார். கொரோனா காலத்திலும் இந்த் மாற்றம் தேவையா என விமர்சனங்கள் எழுந்தாலும் மகன் உதயநிதிக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் இருகிறது அவரது புது கெட்-அப். அவரை அடுத்து தேசிய தலைவர்களும் தங்களது கெட்-அப்களை மாற்றி வருகின்றனர்.  

பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, அவரது உருவத்தில் சற்று வித்தியாசம் தெரிவிந்தது.  அவரது மீசை, வழக்கத்தை விட நீண்டிருந்தது. தாடியும் வளர்ந்திருந்தது. தோற்றப்பொலிவு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், மிகவும் கவனமாக இருப்பவர், மோடி. எந்த கோணத்தில் படம் பிடிக்க வேண்டும் என்பதையும், கேமராமேனிடம் கூறிவிடுவார். அவருக்கென தனியாக சிகை அலங்கார கலைஞர்கள் இருக்கின்றனர். 

ஆனால், ஊரடங்கால் நாடு முழுதும் சலுான் மூடப்பட்டுள்ளது. வளர்ந்த தலைமுடியை திருத்திக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். எனவே, அப்படிப்பட்ட மக்களோடு மக்களாக இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கில் தான், சிகை அலங்காரத்தை நிறுத்தி விட்டார் மோடி என, சொல்லப்படுகிறது.  அதே நேரத்தில் சீனா- இந்தியா போர்  பதற்றம் நிறைந்த நாளில் அவர் எல்லைக்கு சென்று வீரர்களிடம் பேசும்போது கம்பீரத்தை வெளிப்படுத்தவே மீசையை முறுக்கி விட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், தலை முடியை மாற்றி, தனது தந்தை ராஜிவ் காந்தியை போல காட்சியளிக்கிறார்.