வன்முறையை ஆதரிக்கும் ப.சிதம்பரம், ஸ்டாலின் போன்றவர்களை பொது வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

வன்முறையை ஆதரிக்கும் ப.சிதம்பரம், ஸ்டாலின் போன்றவர்களை பொது வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ போராட்டம் நாடு முழுவதும் வலுப்பெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையில் பிப்ரவரி 14ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனை வன்மையாக கண்டித்த திமுக தலைவர் ஸ்டாலின், " பிப்ரவரி 14 இரவை காவல்துறையினர் கருப்பு இரவாக்கி விட்டனர்" என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தற்போது டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லி பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "இவர்களை ஆதரிக்கும் ப.சிதம்பரம், ஸ்டாலின் போன்றவர்கள் பொதுவாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்" என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…