அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு தற்போதைக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்  என தேர்தல் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

கட்சியை பதிவு செய்யாததால் குக்கர் சின்னத்தை அமமுக கட்சிக்கு வழங்க முடியாது என தேர்தல் ஆணியம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அமமுக கட்சி வேட்பாளர்கள அனைவருக்கும் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால்கடைசி நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமமுக வேட்பாளர்கள் பிற்பகல் 2 மணி அளவில் தங்கள் தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த பிரமாணபத்திரம் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரியிடம் அந்த அந்த தொகுதி அமமுக வேட்பாளர்கள் வெற்றிகரமாக தாக்கல் செய்தனர். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும், புதுவையில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியிலும், அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அமமுகவுக்கு எப்போது பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,
அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு தற்போதைக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்  என தேர்தல் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.