Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக் குழுவா? வாய்ப்பு இல்ல ராஜா.. EPS கோட்டையில் வெடி வைத்த வைத்தியலிங்கம்.

சதிகாரர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள் என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சின் கையெப்பம் இல்லாதல் பொதுக்குழு நடத்த முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆவேஞம் தெரிவித்துள்ளார். 

general body committee without OPS signature? No chance .. The vaithyalingam who blew up the EPS plan.
Author
Chennai, First Published Jun 23, 2022, 4:32 PM IST

சதிகாரர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள் என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சின் கையெப்பம் இல்லாதல் பொதுக்குழு நடத்த முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆவேஞம் தெரிவித்துள்ளார். புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார்.  அவரின் இந்த கருத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பகீரத சட்ட போராட்டத்திற்கு பின்னர் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற அனுமதி இல்லை என தீர்ப்பு பெற்று பன்னீர்செல்வம் களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழுவில் இன்று காலை கலந்து கொண்டார். 

எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாகவே சென்னை வானகரத்தில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில்  ஓ பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றனர். அப்போது அரங்கில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வைத்திய லிங்கத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். துரோகி வைத்தியலிங்கமே வெளியே போ என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

general body committee without OPS signature? No chance .. The vaithyalingam who blew up the EPS plan.

கூட்டம் தொடங்கியது முதலிருந்தே ஓபிஎஸ்-க்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அது ஓபிஎஸ்சை சங்கடத்தில் ஆழித்தியது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் கடுமையான அவமரியாதைக்கு ஆளானார். மேடையில் கொபம் கொப்பளிக்க இறுக்கமாகவே ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். ஆரம்பம் முதல் இருந்தே கூச்சல் குழப்பமாகவே பொதுக்குழு கூட்டம் இருந்தது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒற்றைத் தலைமை என்ற முழக்கத்தால் ஏற்பட்ட மொதலால் பொதுக்குழு கூட்டம் கலைந்தது. 

எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத் தலைமையாக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் அதிகரித்தது. ஓ பன்னீர் செல்வத்தை அச்சுறுத்தும் வகையில் அங்கு நிலமை மாறியது. இந்நிலையில் அவசர அவசரமாக ஜூலை 16ஆம் தேதி மீண்டும் பொதுக் குழு நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அறிவித்தனர். அதில் அதிர்ச்சியடைந்த  ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர் வைத்திய லிங்கத்துடன் மேடையிலிருந்த திடீரென கீழே இறங்கினார். அப்போது ஒலிபெருக்கியில் பேசி வைத்தியலிங்கம் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தை நிராகரிக்கிறோம் என முழங்கினார்.

மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், இந்த பொதுக்கூட்டம் சட்டத்திற்கு புறம்பான வகையில் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளரை மேடையில் வைத்து அவமரியாதை செய்தனர், மற்றொரு பொதுக்கூட்டம் தேதி அறிவித்துள்ளார்கள், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் புதிய பொதுக்குழு தேதி செல்லாது. 

general body committee without OPS signature? No chance .. The vaithyalingam who blew up the EPS plan.

சதிகாரர்கள் அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் என கொந்தளித்தார். மற்றொரு பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டுமென்றால், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கையொப்பம் அவசியம் அவரின் கையொப்பம் இல்லாமல் அடுத்த பொதுக்குழுவை நடத்த முடியாது என வைத்திலிங்கம் பேசியுள்ள கருத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை யோசிக்க வைத்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios