நாடுமுழுவதும் நடைபெற்ற, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி வருகிறது. இம்முறை பாஜக அணி கண்டிப்பாக வெற்றி பெறாது என கூறிய, காங்கிரஸ் கட்சியினர் கணிப்பை பொய்யாகும் விதமாக, பிஜேபி கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிஜேபி அணியில் இருந்து விலகியதாக தெரிவித்த, பிரபல நடிகையும் நடன இயக்குனருமான, காயத்திரி ரகுராம், மோடியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுலுக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், go back மோடி என கூறியவர்கள் இப்போது முகத்தை காட்டுங்கள்,  ராகுல் காந்தி முன்பே லண்டன் சென்று விட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

மோடிக்கு ஆதரவாக தற்போது இவர் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் போட்டுள்ளதால், மீண்டும் இவர் பாஜக அணியில் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

இவரின் பதிவு இதோ...