gangai amaran nominate in rk nagar
இன்றோ அல்லது நாளையோ ஆர்.கே நகரில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

திமுக அதிமுகவை தவிர்த்து அதிமுக ஓபிஎஸ் அணி, தீபா அணி, ஏற்கெனவே வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்ட தேமுதிக மக்கள் நல கூட்டணி பாமக ஆகியோர் களத்தில் குதிக்க உள்ளனர்
இந்த களேபரங்களுக்கு இடையே உபி, உத்தரகாண்ட் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவும் களத்தில் குதிக்கிறது.

பாஜக சார்பில் ஏற்கெனவே ஆர். கே நகர் பகுதியில் மிகவும் பரிட்சயமான தமிழிசை நிற்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழிசைக்கு பதிலாக சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிரபல இசையமைப்பாளரும் கரகாட்டக்காரன் பட புகழ் இயக்குனருமான கங்கை அமரன் நிறுத்தப்பட இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஒரு சில நாட்களில் கங்கை அமரன் தன் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.

வட சென்னையின் ஆர்.கே நகரில் உள்ள தலித் மக்களின் ஓட்டை அள்ளுவதற்காக அச்சமூகத்தை சேர்ந்த ஒரு பிரமுகரை பாஜக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.
கங்கை அமரன் பாஜக தரப்பில் முன்னிறுத்தப்படும் பட்சத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா குடும்பத்திலிருந்து தேர்தல் அரசியல் களம் காணும் முதல் நபர் கங்கை அமரன் ஆவார்.
