Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு நேரமே இல்லையாம்! குதிச்சுக் குதிச்சு துண்டு போடும் திருமா!

நேரம் மற்றும் வேலைப்பளுவின் காரணமாகவே பிரதமரால் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட வரமுடியவில்லை!: என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Gaja cyclone...PM Modi romba busy
Author
Delhi, First Published Dec 13, 2018, 3:13 PM IST

* ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பின்னடைவு இல்லை. இது ராகுலுக்கும், மோடிக்கும் இடையிலான போட்டியுமல்ல. இந்த தேர்தலானது மக்களின் வெளிப்பாடு!: கிரண் பேடி இவ்வாறு கூறியுள்ளார். (அதாவது ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்! அப்படிங்கிறா மாதிரி அழகா நழுவி பேசுறீங்களே  மேடம்!)

* நேரம் மற்றும் வேலைப்பளுவின் காரணமாகவே பிரதமரால் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட வரமுடியவில்லை!: என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். (234 சட்டசபை தொகுதிகள், 39 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டின் பிரச்னையை கவனிக்கிறது, இந்திய பிரதமரோட ‘வேலைகள் லிஸ்ட்’டில் இல்லைன்னு தெளிவா சொல்லிட்டீங்க தல)

* இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 18 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, பொதுத்தேர்தலை சந்திக்காமலேயே ஆட்சி அமைக்கும்!: என்று வைகோ கூறியுள்ளார். (அது சரிண்ணே, இந்த இடத்துல ஒரு டவுட்டு. இருபது தொகுதி இடைத்தேர்தல்ல தி.மு.க. கூட்டணியில இருக்கப்போற நீங்க, அடுத்த பொதுத்தேர்தல்ல எந்த கூட்டணிக்கு போவீங்க?)

* தன் பிரசாரத்தின் மூலம் காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளார் ராகுல். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியைத் தலைமை ஏற்று வழிநடத்த அவர் தகுதியானவர்தான் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்: என திருமாவளவன் பாராட்டியுள்ளார். 
(சரி, சரி தல. ஒரு வேளை ஸ்டாலின் கைவிட்டாலும் காங்கிரஸ் கைவிட கூடாதுங்கிற முன்னெச்சரிக்கையில  கூட்டணிக்கு நீங்க குதிச்சுக் குதிச்சு துண்டு போடுற சாணக்கியத்தனத்தை பார்க்கிறப்ப...அட! அட! அட!)

* ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. இந்த மாநிலங்களில் நீண்ட காலம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் மக்கள் இம்முறை மாற்றி ஓட்டுப் போட்டுள்ளனர் அவ்வளவே!: என்று டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார். (அதான் டாக்டரே அறுத்து, ஆராய்ஞ்சு உங்களுக்கு சப்போர்ட் பண்ணி சொல்லிட்டாரே     அமித்ஷாஜி. பின்னே என்ன நாடாளுமன்ற தேர்தல்ல, நாற்பதுல அவருக்கு ஒரு இருபதை கொடுத்து கூட்டணியை கப்புன்னு கன்ஃபர்ம் பண்ணிடுங்க. நாற்பதும்  நமதே!)

Follow Us:
Download App:
  • android
  • ios