இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.திடீரென கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு  இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன.இதில் சீன ராணுவீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய ராணுவீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மூப்படைகளுக்கும் முழுசுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.சீனா மட்டுமல்ல எந்த நாடு நம்மை தாக்கினாலும் திருப்பி தாக்கவதற்கு அரசின் சிக்னல் லுக்காக காத்திருக்க வேண்டாம் என்று இந்திய அரசு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

 இந்திய தரப்பில் 20 ராணுவீரர்களும், சீன தரப்பில் 35 ராணுவீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.இருந்தாலும் சீனா கல்வான் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எந்த ஒரு உத்தரவுக்கும் உள்துறை பாதுகாப்பு துறையில் இருந்து உத்தரவுக்காக காத்திருக்க தேவையில்லை. அனைத்து முடிவுகளையும் முப்படைகளின் தளபதிகள் எடுத்துக்கொள்ள சுதந்திரம் வழங்கியிருப்பது சீனா படைகளுக்கு சற்று கதிகலங்க வைத்துள்ளது. காரணம் இந்திய பாதுகாப்பு படைகள் சீனாவை படைகளை அழிக்க போதுமான அளவிற்கு திராணியுடன் இருக்கிறது என்பது உலக நாடுகளுக்கு தெரியும். என்ன தான் சீனா பெரும் படைகளை வைத்திருந்தாலும் உலக நாடுகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும் வல்லமை இந்திய அரசிடம் ராணுவத்திடம் இருக்கிறது.

சீனாவுடனான எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பொருட்களை வாங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத் தயாரிப்பை அதிகரிப்பதற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.