தமிழகத்தில் சென்னை திருவள்ளுர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாவட்டங்களை தொடர்ந்து மதுரையிலும் கொரோனா கோரதாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளதால் மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு நாளைமுதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஆக்டோபஸ் போன்று டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஆரம்பித்து  சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் சென்னையை ஆட்டிப்படைத்து கொண்டிருந்த கொரோனா தற்போது சென்னைவாசிகளால் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை பரப்பி விட்டிருக்கிறார்கள். இதனால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்த மாவட்டங்களிலும் அதிக அளவில் பரவி இருக்கிறது.

 இதுவரைக்கும் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று இல்லாமல் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த மக்கள் தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனாவை கொண்டு வந்து விட்டார்கள்.இதனால் கிராமப்புறங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். சென்னை முழுவதும் லாக் டவுன் என்று முன்கூட்டியே அறிவித்ததும் தமிழகம் எங்கும் நீக்கமற சென்னையில் நிறைந்திருக்கும் தமிழக மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு இரவோடு இரவாக படையெடுத்து வந்து விட்டார்கள். வந்தவர்கள் கொரோவையும் கூடவே அழைத்து வந்துவிட்டது தான் வினையே.

மதுரைக்குள் மட்டும் சுமார் 20ஆயிரம் பேர்  சென்னைக்குள் வந்து இருக்கிறார் அவர்கள் யாரையும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை செய்ய வில்லை என்று மதுரை எம்பி வெங்கடேசன் திமுக எம்எல்ஏக்கள் டாக்டர் .சரவணன் மூர்த்தி போன்றவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளைமுதல் 30-ம்தேதி வரை சில தளர்வுகளுடன் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.முழு பொதுமுடக்கம் மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப்பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் அமல்படுத்தப்படும்.

காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்.ஆட்டோ, டாக்சி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவரச மருத்துவ சேவைக்கு மட்டுமே அனுமதி.அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.  தேனீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை.உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுமதி.போனில் உணவுகளை ஆர்டர் செய்து டொர் டெலிவரி செய்வதற்கும் அனுமதி.வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எவ்வித தளர்வுகளும் இன்றி முழு பொது முடக்கம்.ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.