Asianet News TamilAsianet News Tamil

அடிதூள்.. தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திராவுக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது..

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, வெளி மாநிலங்களுக்கான பேருந்து சேவை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கியது. மார்ச் 24 ம் தேதிக்கு பிறகு மீண்டும் வெளிமாநில பேருந்து சேவை துவங்கியது.

 

From Tamil Nadu to Karnataka, Andhra Pradesh bus service resumed ..
Author
Chennai, First Published Aug 23, 2021, 10:00 AM IST

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, வெளி மாநிலங்களுக்கான பேருந்து சேவை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கியது.மார்ச் 24 ம் தேதிக்கு பிறகு மீண்டும் வெளிமாநில பேருந்து சேவை துவங்கியது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் வரும் 6ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்து சேவை சென்னை கோயம்பேடு பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவை காலையிலிருந்து தொடங்கியுள்ளது. 

From Tamil Nadu to Karnataka, Andhra Pradesh bus service resumed ..

பொதுமக்கள் ஆந்திரா, கர்நாடகா செல்லக்கூடியவர்கள் காலை முதலே செல்ல தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பதி வரை பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து நிலையில் அக்டோபர் முதல் மே மாதம் வரை இயக்கப்பட்டது பின்னர் கொரோனோ பாதிப்பு காரணமாக அந்த சேவையை நிறுத்தி வைக்கப்பட்டாது. பின்னர் தற்போது 63 நாட்கள் கழித்து மீண்டும் பேருந்து சேவையை துவங்கி உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இருந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

From Tamil Nadu to Karnataka, Andhra Pradesh bus service resumed ..

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 200பேருந்துகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. பேருந்தில் வரும் பயணிகளுக்கு முறையாக முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா பரவலால் கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளி மாநிலங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதையடுத்து தற்போது மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios