Asianet News TamilAsianet News Tamil

அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை நுழையவிட மாட்டோம் !! இனி அய்யப்ப ஜல்லிக்கட்டுதான் !! எச்சரிக்கும் தந்திரி பேரன்…..

சபரிமலை நடை திறக்கும் போது கோவிலுக்குள் பெண்கள் வந்தால், காந்திய வழியில் அறிவுரை கூறி  அவர்களை திருப்பி அனுப்புவோம் என்றும், 'அய்யப்ப ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் சபரிமலை தலைமை தந்திரியாக இருந்து மறைந்த, மகேஸ்வரருவின் பேரன், ராகுல் ஈஸ்வர் எச்சரித்துள்ளார்.

from october 16 ayyappa jallikattu in sabarimalai
Author
Sabarimala, First Published Oct 10, 2018, 7:17 PM IST

கேரளாவில் உள்ள , பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயதிற்கு கீழும் 50 வயதிற்கு மேலும் உள்ள பெண்கள் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோவிலுக்குள் என, உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதற்கு ஒரு சிலர் வரவேற்பும், ஒரு சிலர் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து  வருகின்றனர். பெண்களை அனுமதிக்கக் கூடாது என ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த சில நாட்களாவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

from october 16 ayyappa jallikattu in sabarimalai

ஆனால் வரும் 16 ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க பினராயி தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலின் தலைமை தந்திரியாக இருந்த, மறைந்த, மகேஸ்வரருவின் பேரனும்,அய்யப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்தவருமான, ராகுல் ஈஸ்வர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சீராய்வு மனு தாக்கல் செய்யாதது, பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. பிரம்மச்சாரியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அய்யப்பன் பற்றிய ஐதீகத்திற்கு விரோதமானது என திடீர் குரல் கொடுத்துள்ளார்.

from october 16 ayyappa jallikattu in sabarimalai
பக்தர்கள் செலுத்தும் காணிக்கையில் இயங்கும் தேவசம் போர்டு, அய்யப்பனுக்காக, 10 லட்சம் ரூபாய் செலவிட்டு, வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பிற அமைப்புகள் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும், தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், அந்த வழக்கு பலவீனமாகுமஎன கூறியுள்ளார்..

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல், கேரளாவில் பல இடங்களில் அமைதியாக போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டங்களுக்கு, 'அய்யப்ப ஜல்லிக்கட்டு' என, பெயர் சூட்டியுள்ளோம். தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றியது போல, சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என ராகுல் ஈஸ்வர் தெரிவித்தார்.

from october 16 ayyappa jallikattu in sabarimalai

சபரிமலையில், மாத பூஜைக்கு நடைதிறக்கும் போது, அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் முதல், ஐந்து நாட்கள், ஏராளமான பக்தர்கள் அய்யப்பனை காவல் காப்பர். அங்கு 10 - 50 வயதுடைய பெண்கள் வந்தால், காந்திய வழியில் அவர்களுக்கு அறிவுரை கூறி, திருப்பி அனுப்புவோம் என அவர் எச்சரிக்கை விடுதுள்ளார்.

அதையும் மீறி, அவர்கள் சென்றால், பக்தர்களின் நெஞ்சின் மீது மிதித்து தான், செல்ல வேண்டும். இந்த அறவழிப்போராட்டத்தில், தமிழக பக்தர்களும் பங்கேற்று, சபரிமலையின் புனிதத்தை காக்க முன்வரவேண்டும் என்று ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios