Asianet News TamilAsianet News Tamil

நெச்சுக்கு நீதி படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி...! வாழ்க திராவிட மாடல்! தமிழக அமைச்சர்களை கலாய்க்கும் சீமான்

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெச்சுக்கு நீதி திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்டும் கொடுத்து பிரியாணியும் போடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
 

Free tickets for Udayanithi movie viewers Biryani Seeman criticizes Tamil Nadu government
Author
Tamil Nadu, First Published May 23, 2022, 12:21 PM IST

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி

இயக்குனரான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் மே 20ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழகத்தில் பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து ரசிகர்கள் மற்றும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து புகைப்படத்தையும் வெளியிட்டனர். பல இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவாகவே கொண்டாடினர். திரையரங்கில் கேக் வெட்டியும் இலவசமாக டிக்கெட் கொடுத்தும் கொண்டாடினர்.

Free tickets for Udayanithi movie viewers Biryani Seeman criticizes Tamil Nadu government

திமுகவினர் கொண்டாட்டம்

இந்தநிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை வாழ்த்தி தமிழக காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர் வைத்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இரா. கதிரவன், பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை என்னும் ப்ளக்ஸ் பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பெரம்பலூா் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளையபெருமாள் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி விளம்பர ப்ளக்ஸ் வைத்திருந்ததாக கதிரவன் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனா். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக டிஜிபி அலுவலகத்தில் புகாரும் செய்தது.

Free tickets for Udayanithi movie viewers Biryani Seeman criticizes Tamil Nadu government

இலவச டிக்கெட், பிரியாணி

 இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்...படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள்.  சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்! என அமைச்சர்களை கலாய்த்து சீமான் பதிவிட்டுள்ளார்.சீமானின் டுவிட்டர் பதிவிற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios