Asianet News TamilAsianet News Tamil

6 மாதங்களில் இவ்வளவு மோசடியா… அரசு வங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்து மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்

வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

fraudulent transaction in govt bank sectors for  last 6 months says cent govt
Author
Chennai, First Published Nov 20, 2019, 7:30 PM IST

6 மாதங்களில் இவ்வளவு மோசடியா…அரசு வங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்து மத்தியஅரசு அதிர்ச்சித் தகவல்

நடப்பு நிதியாண்டில்  ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாத காலகட்டத்தில், அரசு வங்கிகளில் ரூ.95 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றிருப்பதாக, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்த கேள்விக்கு, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

ரிசா்வ் வங்கியிடம் உள்ள தகவல்களின்படி,நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95 ஆயிரத்து 760.49 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் 5ஆயிரத்து743 வங்கி மோசடிகளின் நடந்துள்ளன.

fraudulent transaction in govt bank sectors for  last 6 months says cent govt

வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

fraudulent transaction in govt bank sectors for  last 6 months says cent govt

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கி முறைகேடு தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் பதில் அளிக்கையில், “ பிஎம்சி வங்கியில் வாடிக்கையாளா்கள் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளா்கள் தங்களது இருப்புத் தொகை முழுவதையும் எடுக்க முடியும். கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நிலவரப்படி, பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்களின் மொத்த எண்ணிக்கை சுமாா் 9 லட்சம்” என்று தெரிவித்தார்்.

Follow Us:
Download App:
  • android
  • ios