முன்னாள் எம்.பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

46 வயதான ஜே.கே.ரித்தீஷ் சொந்த ஊரான ராமநாதபுரம் இல்லத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ சோதனை செய்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். தற்போது அதிமுக முக்கிய பிரமுகராக உள்ள ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரத்தில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக பிரச்சாரம் செய்வதற்காக சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு சென்று சொந்த வீட்டில் தங்கி இருந்தார். 

ஏற்கெனவே 2016ல் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.