Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை.. அதிர்ச்சியில் அதிமுக.

அதை ஏற்று  அப்போது அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது

Former minister Vijayabaskar was interrogated for more than 4 hours. AIADMK in shock.
Author
Chennai, First Published Oct 25, 2021, 3:37 PM IST

கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் விசாரணை 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்தபோது  அதிகார துஷ்பிரயோகம் செய்து அதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது இவர் மீதான புகார். 

Former minister Vijayabaskar was interrogated for more than 4 hours. AIADMK in shock.

இதையும் படியுங்கள் : சசிகலா விவகாரத்தில் எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த பன்னீர்.. கட்சியில் சேர்ப்பது குறித்து வெளியிட்ட அதிரடி தகவல்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி எம்ஆர் விஜயபாஸ்கர்க்கு சொந்தமான வீடி, அலுவலகம் என  மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த சோதனையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அந்த கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தகவல் சேகரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கடந்த 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருந்ததால், அதை காரணம் காட்டி நேரில் ஆஜராக முடியாது என்றும், வேறொரு நாளில் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

Former minister Vijayabaskar was interrogated for more than 4 hours. AIADMK in shock.

இதையும் படியுங்கள் : தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

அதை ஏற்று  அப்போது அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில், தனது சகோதரருடன் அவர் இன்று ஆஜரானார். காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவரிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களுக்கு இந்த விசாரணை நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios