Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்ற போது பால்வளத்துறை அமைச்சராக ஆவடி நாசர் பொறுப்பேற்றுக்கொண்டார். 

Former minister Avadi Nasser admitted to Apollo Hospital
Author
First Published Jul 10, 2023, 11:15 AM IST

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்ற போது பால்வளத்துறை அமைச்சராக ஆவடி நாசர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, ஆவடி நாசர் மீதும் அவரது மகன் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும், ஆவின் பால் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. 

இதையும் படிங்க;- மீண்டும் சீனாக சீனுக்கு வரும் சசிகலா.! அதிரடி அறிவிப்பு வெளியீடு.! அதிர்ச்சியில் இபிஎஸ் .!

Former minister Avadi Nasser admitted to Apollo Hospital

இதனையடுத்து, ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றார். பின்னர்,  ஆவடி நாசர் வெறும் கட்சி தொடர்பான நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்தார். 

இதையும் படிங்க;-  Registration Fees: தமிழகத்தில் இன்று முதல் பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு.. எந்த பதிவுக்கு எவ்வளவு ரூபாய்?

Former minister Avadi Nasser admitted to Apollo Hospital

இந்நிலையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios