உலக வங்கியிடம் கடன் பெற்று சாலை அமைக்கும் பணி முதலமைச்சரின் உறவினருக்கு தரப்பட்டுள்ளதாக ஆர்.ராசா கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி, நெடுஞ்சாலைதுறையில் ஊழல் செய்துள்ளார். என்னைப்போல் சிபிஐ விசாரணையை எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவருக்கும், முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரையில் ஜனநாயகத்துக்கு அடிநாதமாக
விளங்குகின்ற அடிப்படை அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றவாளி இவர்கள் என்று உச்சநீதிமன்றம்
குறிப்பட்டுள்ளது. 

அந்த ககுற்றவாளிகளுக்கு ஏவல் செய்த அந்த ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சமி உள்ளிட்டவர்கள் செய்த ஊழல் வெளி
வந்திருக்கிற காரணத்தால், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக திமுக மீதும் திமுக தலைவர் மீதும் வேண்டுமென்றே அரசியல்
பழிக்குற்றங்களை செய்து வரும் பழனிசாமி, தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பை
நடத்துகின்றோம்.

எடப்பாடி மீதும் அவருடைய உறவின்ர மீதும் நாங்கள் தொடுத்து வைத்திருக்கின்றன வழக்கில் போதுமான ஆதராம் இருப்பதாக
உயர்நீதிமன்றம் மனநிறைவுக்கு வந்த காரணத்தால், இதை விசாரிக்க வேண்டடும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். நாங்கள்
கொடுத்திருக்கும் ஆதாரங்களைப் பார்த்துவிட்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு
போட்டிருக்கிறது. திமுக ஊழல் கட்சி என்றால் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு யார்
தண்டனைப் பெற்றிருக்கிறார்கள்? அல்லது யார் யார் எல்லாம் சிபிஐ-க்கு பயந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

திமுக கொடுத்த ஆதாரத்தை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உறவினருக்கு அரசு ஒப்பந்தம் தரக்கூடாது
என்று உலக வங்கிக்கடன் விதியில் கூறப்பட்டுள்ளது. உலக வங்கிக் கடனை பெற்று, சாலை அமைக்கும் எடப்பாடி உறவினருக்கும் இது
தரப்பட்டுள்ளது.

எங்களை ஊழல் கட்சி என்கிறீர்களே.. ஊழலை தொடங்கியதே திமுகதான் என்கிறீர்களே... அப்படியென்றால் அண்ணா மீது புழுதி வாரி
இறைக்கறீர்களா? அண்ணாவை கொச்சைப்படுத்துகிறீர்களா? அண்ணா சமாதிக்குச் சென்று மாலை போடுவீர்களா? எம்ஜிஆர் மீது
நம்பிக்கைக் கொண்டவர்கள் இதனை ஏற்பார்களா என்பது தெரியவில்லை.  சிபிஐ கேசை எதிர்கொள்ள திராணியிருந்தால், ஒரே
மேடையில் பேசலாம் என சவால் விடுத்தார்.

எனக்கு எதிராக என்ன சொன்னீர்களோ அதனை ஃபாளோ செய்யுங்களேன்... பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக மீது குற்றம்
சுமத்துங்களேன் என்கிறார். மத்திய அரசின் கால்களை வருடும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை
நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன். மத்திய அரசாங்கத்தை அண்டி பிழைக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் அடிவருடியாக அதிமுக
அரசு உள்ளது என்று ஆ.ராசா, மத்திய-மாநில அரசு மீது குற்றம் சுமத்தினார்.