திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திரா நகரில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி வசித்து வருகிறார். நேற்று இரவு ரூ.16 லட்சம் மதிப்பிலான இனோவா காரினை வீட்டு வாசலில்  நிறுத்தியிருந்தார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி வீட்டில் நிறுத்தியிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான இனோவா கார் திருடிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திரா நகரில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி வசித்து வருகிறார். நேற்று இரவு ரூ.16 லட்சம் மதிப்பிலான இனோவா காரினை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் வழக்கம் போல் எழுந்து பார்த்த போது கார் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் மதில் சுவரில் ஏறி மர்ம நபர்கள் காரையும், புல்லட்டின் சாவியையும் எடுத்து சென்றுள்ளனர். உடனே இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதுதொடர்பாக மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இதே சின்னச்சாமியின் காரை டாடாசுமோ காரை மர்மநபர்கள் எரிந்து விட்டுச் சென்றிருந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.