சென்னை ஆளுநர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமானம் செய்து வைத்தார். 

நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த அதிமுக அணிகள் இணைப்பு இன்று நிறைவேறியுள்ளது. 6 மாத இடைவெளிக்கு பிறகு தலைமை அலுவலகம் வந்த பன்னீர் எடப்பாடியுடன் சேர்ந்து அணி இணைப்பை உறுதி செய்தார். 

இதையடுத்து புதிய அமைச்சரவை பட்டிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த நிதி மற்றும் வீட்டு வசதித்துறை பறிக்கப்பட்டுள்ளது. 

செங்கோட்டையன், சேவூர் ராமசந்திரனிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மாஃபா. பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவி. சண்முகத்துக்கு, சுரங்கம் மற்றும் கனிவளத்துறை வழங்கப்பட்டுள்ளது. ராதாகிருண்னுக்கு கால்நடை துறை வழங்கப்பட்டுள்ளது என கூறியிருந்தது. 

அதன்படி இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வராக பதவி பிரமானம் செய்து வைத்தார். இதனால் தொண்டர்கள் மிக உற்சாகத்தில் திழைத்துள்ளனர்.