Asianet News TamilAsianet News Tamil

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு சிறை! சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Former AIADMK minister jailed for five years
Former AIADMK minister jailed for five years
Author
First Published Jun 6, 2018, 12:45 PM IST


 

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடலாடி சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின்போது வருவாய் துறை அமைச்சராக சத்தியமூர்த்தி இருந்து வந்தார்.

கடலாடி சத்தியமூர்த்தி அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ரூ.83 லட்சம ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக இழுபறி நலையிலேயே நடந்து வந்தது.

இந்த நிலையில், கடலாடி சத்தியமூர்த்தி வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சத்தியமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சந்திரா இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios